கோவையில் பானி பூரி கடைகளில் உணவு பாதுகாப்பு துறையின் திடீர் சோதனை: 16 கடைகளுக்கு நோட்டீஸ்

கோவையில் பானி பூரி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். 73 கடைகளில் சோதனை செய்யப்பட்டு, 16 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தரமற்ற உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கோவை மாநகரில் பானி பூரி விற்பனை செய்யும் கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில் 10 குழுக்களாக பிரிக்கப்பட்டு இந்த சோதனை நடத்தப்பட்டது.

கோவை நகரின் பல்வேறு பகுதிகளான காந்திபுரம், வ.உ.சி. பூங்கா, காந்தி பார்க், ஆர்.எஸ்.புரம், பீளமேடு, சித்ரா, சிங்காநல்லூர், கணபதி, சாய்பாபா காலனி, சரவணம்பட்டி, வடவள்ளி டவுன்ஹால், ராமநாதபுரம், உக்கடம் சுந்தராபுரம், குனியமுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. மேலும், கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், மதுக்கரை, வால்பாறை, மேட்டுப்பாளையம், அன்னூர், பெரியநாயக்கன்பாளையம் போன்ற மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் சோதனை நடைபெற்றது.



இந்த சோதனையின் போது, 73 கடைகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் 16 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. நான்கு உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்காக உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதற்காக 6 கடைகளுக்கு ரூ.12,000 அபராதம் விதிக்கப்பட்டது.



சோதனையின் போது, 65 லிட்டர் அதிக நிறமூட்டப்பட்ட பானி பூரி மசாலா, 57 கிலோ தரமற்ற உருளைக்கிழங்கு, காளான் 5 கிலோ, 19 கிலோ உருளைக்கிழங்கு மசாலா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன், செய்தித்தாள்களில் சுற்றப்பட்ட பஜ்ஜி, போண்டா போன்ற உணவுப் பொருட்களும், அதிக நிறமூட்டப்பட்ட சிக்கன் 65, காளான் மசாலா போன்ற 15 கிலோ உணவுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.28,200 ஆகும்.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சோதனை நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...