திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. பல லட்சம் மதிப்பிலான பனியன் துணிகள், அட்டைப்பெட்டிகள் மற்றும் இயந்திரங்கள் சேதமடைந்தன. தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.



திருநாவுக்கரசு மற்றும் ஜெகதீஷ் என்ற இரு நண்பர்கள் கலைவாணி தியேட்டர் அருகில் மூன்று மாடி கட்டிடத்தில் பின்னலாடை நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இரண்டாவது மாடியில் இயங்கும் இந்த நிறுவனத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். முதல் மற்றும் மூன்றாவது தளத்தில் செந்தில் என்பவர் மற்றொரு பின்னலாடை நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இன்று காலை முதல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த பனியன் துணிகள் மற்றும் அட்டைப் பெட்டிகளில் இருந்து திடீரென கரும்புகை எழுந்தது. சற்று நேரத்தில் தீ மளமளவென முதல் தளம் முழுவதும் பரவியது. இதனைக் கண்ட ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.

தீயை அணைக்க முயன்ற ஊழியர்களால் முடியவில்லை. உடனடியாக திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.



இரண்டு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.



இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பனியன் துணிகள், அட்டைப்பெட்டிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன. அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...