உடுமலையில் அனுமதியின்றி புகையிலை விற்பனை: ஒருவர் கைது, 205 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

உடுமலையில் அனுமதியின்றி புகையிலை விற்பனை செய்த மூவரில் ஒருவர் கைது செய்யப்பட்டார். 205 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் மேல்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட சிக்கந்தர் பாஷா வீதியில் அனுமதியின்றி புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உடுமலை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் தலைமையிலான போலீஸ் குழுவினர் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, உடுமலையைச் சேர்ந்த மனோஜ் குமார் (26), மைதீன் பாஷா (33) மற்றும் திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா புது ஆயக்குடியைச் சேர்ந்த சதாம் உசேன் (33) ஆகியோர் சரக்கு வாகனத்தில் புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்திருப்பது தெரிய வந்தது.

உடனடியாக போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்து மனோஜ் குமார் என்பவரை கைது செய்தனர். மேலும், சம்பவ இடத்திலிருந்து 205 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் அவற்றை கொண்டு வந்த சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேல்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய மற்ற இரு நபர்களையும் தேடி வருகின்றனர். இந்த சட்டவிரோத புகையிலை விற்பனை தொடர்பான வலையமைப்பு குறித்தும் விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...