உடுமலையில் போதையில் அரசு பேருந்தை மறித்த நபர் கைது: ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

உடுமலை அருகே வாளவாடியைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவர் போதை நிலையில் அரசு பேருந்தை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தடுத்து நிறுத்தினார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வாளவாடியைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவர் போதை நிலையில் அரசு பேருந்தை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சியிலிருந்து வாளவாடி செல்லும் 41 எண் கொண்ட அரசு பேருந்தை வழிமறித்த பொன்ராஜ், "இந்த ஊருக்கு தண்ணீர் சரியாக வருவதில்லை. தண்ணீர் வரும் வரை பேருந்தை விடமாட்டேன்" என்று கூறி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரகளையில் ஈடுபட்டார்.



"நான் வேட்டியை மடிச்சு கட்டமாட்டேன். கட்டினா வேற மாதிரி ஆகிடும்" என்று வீர வசனம் பேசிக்கொண்டிருந்த பொன்ராஜை காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொன்ராஜ் அடிக்கடி குடித்துவிட்டு அப்பகுதியில் ரகளையில் ஈடுபடுவது வழக்கம் என்று தெரிய வந்துள்ளது. இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பயணிகள், பொன்ராஜ் கைது செய்யப்பட்ட பிறகு நிம்மதி அடைந்தனர்.

தளி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பொன்ராஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...