பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மது போதையில் உறங்கிய நபர்..!

பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மது போதையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நபரை காவல்துறையினர் தட்டி எழுப்பி அனுப்பிவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Coimbatore: பொள்ளாச்சி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சார் ஆட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியது. மது போதையில் இருந்த ஒரு நபர் அலுவலக வளாகத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.

நேற்று மாலை, அதிக அளவில் மது அருந்திய நிலையில் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்த ஒரு நபர், தனது சொந்த வீட்டில் இருப்பது போல நிம்மதியாக குறட்டை விட்டு உறங்கினார். இதனைக் கண்ட அலுவலக ஊழியர்கள், முதலில் அவர் மயக்கமுற்று விழுந்துவிட்டதாக நினைத்து உதவ முயன்றனர். ஆனால், அவர் மது போதையில் இருப்பதை உணர்ந்ததும், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.



சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உறங்கிக் கொண்டிருந்த நபரை எழுப்ப முயன்றபோது, அவர் "எனக்கு தூக்கம் வருகிறது, தயவு செய்து தொந்தரவு செய்யாதீர்கள்" என்று மறுத்தார். நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு, காவல்துறையினர் அவரை எழுப்பியபோது, அவர் திடீரென எரிச்சலடைந்து, "ஏன் என்னை எழுப்பினீர்கள்? இது அரசு அலுவலகம், யார் வேண்டுமானாலும் வரலாம், உறங்கலாம்" என வாதாடினார்.

இறுதியாக, காவல்துறையினர் அவருடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி, அமைதியாக அப்பகுதியிலிருந்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...