கோவையில் அரசு மானியத்துடன் தீவன வளர்ப்புத் திட்டம் - விவசாயிகள் பயன்பெற ஆட்சியர் அழைப்பு

கோவை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு அரசு மானியத்துடன் தீவன வளர்ப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 525 ஏக்கர் நிலத்தில் பசுந்தீவனப் பயிர் வளர்ப்பதற்கு ஏக்கருக்கு ரூ.3,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati அவர்கள் அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கால்நடைகளின் உற்பத்தித் திறனுக்கு தீவனம் மற்றும் பசுந்தீவனம் மிகவும் இன்றியமையாத காரணிகள் என்று குறிப்பிட்டுள்ளார். பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு கறவை மாடுகளுக்குத் தேவையான அளவு பசுந்தீவனம் வழங்குவது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


தீவனப் பற்றாக்குறை மற்றும் தீவன விரயத்தை நிவர்த்தி செய்யும் வகையிலும், கால்நடை வளர்ப்போர் பசுந்தீவனம் உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையிலும் தமிழக அரசு கடந்த 11 ஆண்டுகளாக தீவன அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், நடப்பு நிதியாண்டில் கோவை மாவட்டத்தில் அரசு மானியத்துடன் கூடிய தீவன வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.


இந்தத் திட்டத்தில் தோப்புகள், பழத்தோட்டங்களில் ஊடுபயிராக பசுந்தீவனப் பயிர் வளர்ப்பது தொடர்பாக கோவை மாவட்டத்துக்கு நடப்பாண்டில் 525 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக ஒரு ஏக்கருக்கு ரூ.3,000 வழங்கப்பட உள்ளது.


இத்திட்டத்தில் கால்நடைகள் உள்ள தோப்புகள், பழத்தோட்டம் (குறைந்தபட்சம் 0.5 ஏக்கர், அதிகபட்சம் 25 ஏக்கர்) வைத்திருக்கும் குறு, சிறு விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விவசாயிகள் பல்லாண்டு தீவனப் பயிரை ஊடுபயிராக சாகுபடி செய்ய விரும்பம் உள்ளவராக இருத்தல் வேண்டும். மேலும், 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக இத்திட்டத்தினை செயல்படுத்திட விருப்பம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.


இத்திட்டத்தில் இனம் வாரியாக 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட பழங்குடியின பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள், அருகில் உள்ள கால்நடை மருத்துவ நிலையங்களை அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...