கோவையில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஆய்வு..!

கோவை மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் மத்திய மற்றும் வடக்கு மண்டலங்களில் நடைபெறும் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். சூயஸ் நிறுவனத்தின் மூலம் நடைபெறும் இப்பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.


Coimbatore: கோவை மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள் இன்று (05.07.2024) மத்திய மற்றும் வடக்கு மண்டலங்களில் நடைபெறும் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மத்திய மண்டலம், வார்டு எண் 62-க்குட்பட்ட நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள இரயில்வே பாதை அடிப்பகுதியில் சூயஸ் நிறுவனத்தின் மூலம் குடிநீர் பிரதான குழாய் அமைக்கும் பணிகளை ஆணையர் பார்வையிட்டார்.



வடக்கு மண்டலம், வார்டு எண் 62-க்குட்பட்ட கவுண்டம்பாளையம் நல்லாம்பாளையம், ஜெய் நகரில் உள்ள இரயில்வே பாதை அடிப்பகுதியிலும் குடிநீர் பிரதான குழாய் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார். இப்பணிகளை விரைவாக முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



முன்னதாக, மத்திய மண்டலம், சுங்கம் வரிவசூல் மையத்தில் சூயஸ் நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி வாடிக்கையாளர் சேவை இயந்திரத்தின் செயல்பாடுகளையும் ஆணையர் ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வின் போது மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், உதவி ஆணையர் செந்தில்குமரன், செயற்பொறியாளர்கள் கருப்பசாமி, எழில், மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, குடிநீர் திட்ட மேலாண்மை ஆலோசகர் குழு தலைவர் கோபாலகிருஷ்ணன், உதவி பொறியாளர்கள் நாகராஜ், ரவிக்கண்ணன், சூயஸ் நிறுவன திட்ட இயக்குநர் சங்கராம் பட்நாயக் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...