கோவை அரசு கலைக் கல்லூரியில் ரூ.33.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கழிப்பறைகள் திறப்பு

கோவை அரசு கலைக் கல்லூரியில் கிரிஷா அறக்கட்டளையின் CSR நிதியுதவியுடன் மாணவிகளுக்காக ரூ.33.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கழிப்பறைகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி திறந்து வைத்தார்.


Coimbatore: கோவை அரசு கலைக் கல்லூரியில் தனியார் நிறுவனமான எமரால்டு ஜுவெல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட்டின் கிரிஷா அறக்கட்டளை சார்பில், சமூக பொறுப்பு நிதி (CSR) மூலம் மாணவிகளுக்காக ரூ.33.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கழிப்பறைகள் ஜூலை 5 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து வைத்தார். அவர் தனது உரையில், மாணவிகளின் நலனுக்காக இத்தகைய உதவிகளை வழங்கும் தனியார் நிறுவனங்களின் முயற்சிகளை பாராட்டினார்.



எமரால்டு ஜுவெல் இண்டஸ்ட்ரி நிறுவனத்தின் தலைவரும், கிரிஷா அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலருமான சீனிவாசன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், அறக்கட்டளை மூலம் மேற்கொள்ளப்படும் சமூக முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். மேலும், மாணவ மாணவியர் கல்வி கற்று எதிர்காலத்தில் சமூக பணியாற்ற முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.



இந்நிகழ்ச்சியில் அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் எழிலி, எமரால்டு நிறுவனத்தின் அலுவலர்கள், கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் பல மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். புதிய கழிப்பறை வசதிகள் மாணவிகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...