உடுமலை அருகே ரூ.15 கோடி நில மோசடி: கணியூர் பதிவுத்துறைக்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

உடுமலை அருகே ரூ.15 கோடி மதிப்புள்ள நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்ததற்கு எதிராக, கணியூர் பதிவுத்துறை அலுவலகத்தை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக்குளம் கணியூரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடாக பத்திரப்பதிவு நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. சார் பதிவாளர் பழனிச்சாமி லஞ்சம் பெற்றுக் கொண்டு ஆளும் கட்சிக்கு சாதகமாக பத்திரப்பதிவு செய்து கொடுப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

துங்காவி கிராமத்தைச் சேர்ந்த நடராஜ் என்பவரின் மனைவி கலைச்செல்வி மற்றும் அவரது மகன் விஜயராஜா ஆகியோரின் ரூ.15 கோடி மதிப்புள்ள சொத்துக்களை, துரைராஜா என்பவரின் மனைவி ராஜாமணி சார்பதிவாளர் அலுவலகத்தில் மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடான பதிவுக்கு சார்பதிவாளரும் உடந்தையாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.



இந்த நிலையில், முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ள ஆவணங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும், அப்பாவி விவசாயிகளை ஏமாற்றி பத்திரப்பதிவு செய்து வரும் கணியூர் சார் பதிவாளரை உடனடியாக பணியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி அகில இந்திய விவசாய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சார் பதிவாளரால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இணைந்து கலந்து கொண்டனர். மேலும் சார் பதிவாளர் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...