கோவையில் இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக பாதிரியார் மீது விஸ்வ ஹிந்து பரிஷத் புகார்

கோவை CSI இம்மானுவேல் சர்ச் பாதிரியார் பிரின்ஸ் கால்வின் இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக கூறப்படும் வீடியோ காரணமாக, விஸ்வ ஹிந்து பரிஷத் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.


Coimbatore: கோவையில் இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக கூறப்படும் பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹிப) சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விஹிப அமைப்பினர் ஜூலை 4 ஆம் தேதி ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், கடந்த ஜூன் 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கோவை CSI இம்மானுவேல் சர்ச்சில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாதிரியார் பிரின்ஸ் கால்வின் இந்து சமய நம்பிக்கைகளை இழித்தும் பழித்தும் பேசியதாகக் கூறப்படும் காணொளி சமூக வலைதளங்களில் பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத துவேஷத்தை பரப்பும் இத்தகைய செயல்கள் தேவையற்ற பதட்டத்தை உருவாக்கும் என்று தெரிந்தே பாதிரியார் இவ்வாறு பேசியுள்ளதாக விஹிப சந்தேகம் தெரிவித்துள்ளது. எனவே, பாதிரியார் பிரின்ஸ் கால்வின் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் தனது புகார் மனுவில் கோரியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...