குரூப் 2 தேர்வுக்கு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் - மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. பட்டதாரிகள் இவற்றில் பங்கேற்கலாம். SmartBoard, இலவச Wifi, நூலகம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்த தேர்வுகளுக்கு மொத்தம் 2,327 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குரூப் 2 தேர்வுக்கு 507 பணியிடங்களும், குரூப் 2A தேர்வுக்கு 1,820 பணியிடங்களும் உள்ளன. முதல்நிலைத் தேர்வு 14.09.2024 அன்று காலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். சிறந்த பயிற்றுநர்களால் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மையத்தில் SmartBoard, இலவச Wifi வசதி, அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி ஆகியவை உள்ளன.

பயிற்சி வகுப்புகளுடன் வார தேர்வுகள் மற்றும் முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் இலவசமாக பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் (பொது மற்றும் மாற்றுத்திறனாளிகள்) இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வரலாம். மேலும் விவரங்களுக்கு மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கவுண்டம்பாளையம் அருகிலுள்ள மையத்தை நேரடியாகவோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...