கோவை CSI இமானுவேல் ஆலய உறுப்பினர்கள் பாதிரியார் பிரின்ஸ் கால்வினை கைது செய்யக் கோரி உள்ளிருப்பு போராட்டம்

கோவை CSI இமானுவேல் ஆலய பாதிரியார் பிரின்ஸ் கால்வின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவரை கைது செய்யக் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட ஆலய உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவை பந்தய சாலையில் உள்ள CSI இமானுவேல் ஆலயத்தின் பாதிரியார் பிரின்ஸ் கால்வின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து, அவரை கைது செய்யக் கோரி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆலய உறுப்பினர்கள் ஆலய வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



கடந்த மாதம் 16ஆம் தேதி நடைபெற்ற திருச்சபை ஞாயிறு கூட்டத்தின் போது, பாதிரியார் பிரின்ஸ் கால்வின் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் இந்து மதம் பற்றியும் அவர்களுடைய வழிபாடு பற்றியும் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறுப்பினர்கள் கூறுகையில், "பாதிரியார் பிரின்ஸ் கால்வின் தொடர்ந்து பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார். திருச்சபைக்கு வரும் காணிக்கைகளை முறையாக கணக்கு காட்டாமல் கையாடல் செய்துள்ளார். மலபார் கோல்டு நிறுவனம் விற்றதில் வந்த பணத்தையும் கையாடல் செய்துள்ளார்" என்று குற்றம் சாட்டினர்.

மேலும், "பாதிரியார் மீது திருப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. திருமணம் தொடர்பான பிரச்சனைகள், பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் போன்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன" என்று தெரிவித்தனர்.

"பாதிரியார் பிரின்ஸ் கால்வினை உடனடியாக கைது செய்து, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் செய்த குற்ற செயல்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும். இது நடக்கும் வரை எங்களது உள்ளிருப்பு போராட்டம் தொடரும்" என்று உறுதியாக தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...