கோவை எலக்ட்ரிக் நிறுவனத்தில் முகமூடி அணிந்த நபர்கள் திருட முயற்சி - சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள எலக்ட்ரிக் நிறுவனத்தில் நள்ளிரவில் முகமூடி அணிந்த இரு நபர்கள் திருட முயற்சித்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: கோவை சின்னவேடம்பட்டி அத்திப்பாளையம் பகுதியில் உள்ள "இயோடோம் எலக்ட்ரிக்" நிறுவனத்தில் நள்ளிரவில் முகமூடி அணிந்த நபர்கள் திருட முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிறுவனத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி மேலாளராக ஐந்து ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். வழக்கமாக இரவு 7:00 மணிக்கு நிறுவனம் மூடப்பட்டு காலை 9 மணிக்கு திறக்கப்படும். ஆனால் இன்று காலை நிறுவனத்திற்கு வந்த சத்தியமூர்த்தி, சிசிடிவி கேமராக்கள் திரும்பி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.



சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, நள்ளிரவு 1:30 மணியளவில் முகமூடி அணிந்த இரண்டு நபர்கள் சுவர் ஏறி குதித்து, நிறுவனத்திற்குள் நுழைந்து சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருட முயன்றது தெரியவந்தது.

இது குறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்த சத்தியமூர்த்தி, "முகமூடி அணிந்த நபர்கள் எங்கள் நிறுவனத்தில் திருட முடியாமல் சென்றுள்ளனர். கேட்டை வளைத்துள்ளனர். திருட முயற்சி செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எங்கள் நிறுவனம் உள்ள பகுதிக்கு இரவு ரோந்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள சரவணம்பட்டி காவல்துறையினர், நள்ளிரவில் முகமூடி அணிந்து கொள்ளையடிக்க முயன்ற சந்தேக நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...