கோவை: நடிகை அதுல்யா வீட்டில் திருட்டு - வேலைக்கார பெண் உள்பட இருவர் கைது

கோவையில் நடிகை அதுல்யா வீட்டில் வேலைக்கார பெண் மற்றும் அவரது தோழி திருட்டில் ஈடுபட்டனர். சிசிடிவி காட்சிகள் மூலம் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டனர்.


கோவை: கோவையில் நடிகை அதுல்யா ரவியின் வீட்டில் நடந்த திருட்டு சம்பவத்தில் வேலைக்கார பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வடவள்ளி, மருதம் சாலையில் உள்ள வீட்டில் நடிகை அதுல்யா ரவி தனது தாயார் விஜயலட்சுமியுடன் வசித்து வருகிறார். இவர்களது வீட்டில் தொண்டாமுத்தூர் அடுத்த குளத்து பாளையத்தைச் சேர்ந்த செல்வி என்ற பெண் வீட்டு வேலைகளை செய்து வந்துள்ளார். அடிக்கடி வீட்டில் பணம் மாயமாகி வந்ததால், விஜயலட்சுமி சந்தேகம் அடைந்து வீட்டில் இரண்டு சிசிடிவி கேமராக்களை பொருத்தினார்.

கடந்த மாதம் சென்னை சென்று திரும்பிய விஜயலட்சுமி, வீட்டில் இருந்த 2000 ரூபாய் பணம் மாயமானதை கண்டு, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் வீட்டு வேலைக்கார பெண் செல்வி பீரோவில் இருந்த 2000 ரூபாய் பணம் மற்றும் பாஸ்போர்ட்டை திருடியது தெரிய வந்தது. இது குறித்து விஜயலட்சுமி வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து செல்வியை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் செல்வி, தனது தோழி சுபாஷினியுடன் சேர்ந்து பணம் மற்றும் பாஸ்போர்ட்டை திருடியதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் செல்வி மற்றும் சுபாஷினி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூபாய் 1500 பறிமுதல் செய்யப்பட்டது. பாஸ்போர்ட்டை அச்சத்தில் கிழித்து எறிந்துவிட்டதாக செல்வி தெரிவித்துள்ளார். இந்நிலையில், திருட்டு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் ஆடியோவுடன் வெளியாகியுள்ளன.

வெளியான காட்சிகளில், வீட்டை தாளிட்டு வந்த பின் 2000 ரூபாய் மட்டும் பணம் இருப்பதாக இருவரும் பேசும் உரையாடல்களுடன், பணத்தை திருடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தின் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான அதுல்யா ரவியின் வீட்டில் நடந்த இந்த திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...