கோவையில் சி.ஏ. மாணவர்களுக்கான தேசிய மாநாடு: 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

கோவையில் இந்திய பட்டய கணக்காளர்கள் சங்கம் சார்பில் இரண்டு நாள் சி.ஏ. மாணவர்கள் தேசிய மாநாடு நடைபெற்றது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.


கோவை: கோவையில் இந்திய பட்டய கணக்காளர்கள் சங்கம் (ICAI) சார்பில் சி.ஏ. மாணவர்களுக்கான தேசிய மாநாடு இரண்டு நாட்கள் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.



இந்த மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சி.ஏ. படிக்கும் 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். முதல் நாளில் தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டட் அக்கவுண்டன்ட் ஆப் இந்தியா மற்றும் போர்ட் ஆஃப் ஸ்டடிஸ் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இந்த மாநாடு தென்னிந்திய பட்டயக் கணக்காளர்கள் பிராந்திய கவுன்சில் கோவை கிளை (SIRC) மற்றும் தென்னிந்திய பட்டயக் கணக்காளர்கள் மாணவர்கள் சங்கம் கோவை கிளையால் (SICASA) நடத்தப்பட்டது. கருத்தரங்கில் வருமான வரிச் சட்டங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த கலந்துரையாடல், சி.ஏ. படிப்பிற்கான ஆர்வத்தை தூண்டும் வகையிலான சொற்பொழிவுகள், ஜிஎஸ்டி மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) குறித்த கலந்துரையாடல்கள் உள்ளிட்டவை இடம்பெற்றன.



ICAI முன்னாள் தலைவர் சி.ஏ. ராமசாமி தலைமை விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். சி.ஏ. ஆர்.கேசவன், முன்னாள் இயக்குநர்-நிதி, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் கெளரவ விருந்தினராக கலந்து கொண்டார்.

மாநாட்டில் சி.ஏ. K.ஸ்ரீப்ரியா குமார் (மத்திய கவுன்சில் உறுப்பினர்), கோவை ICAI கிளையின் தலைவர் விஷ்ணு ஆதித்தன், SICASA கோவை கிளை தலைவர் சி.ஏ. தங்கவேல் M, ICAI கோவை கிளையின் செயலாளர் சி.ஏ. சர்வஜித் எஸ்.கிருஷ்ணன் மற்றும் பல தொழில்துறை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...