கோவை தடாகத்தில் உழவர் தின பேரணி: காட்டு பன்றிகளை சுட்டுக் கொல்ல அனுமதி கோரிக்கை

கோவை தடாகத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில் உழவர் தின பேரணி நடைபெற்றது. காட்டு பன்றிகளை சுட்டுக் கொல்ல அனுமதி கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அன்வர்தீன் கலந்து கொண்டார்.


கோவை: கோவை தடாகம் பகுதியில் சாதி, மதம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் உழவர் தின பேரணி மற்றும் நினைவஞ்சலி பொதுக்கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி தலைமையில் நடந்த இந்த நிகழ்வில், உழவர்களின் உரிமைக்கான போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை திட்ட இயக்குநர் அன்வர்தீன் கலந்து கொண்டார். அவரிடம் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். குறிப்பாக, வனவிலங்குகள் விவசாய நிலங்களில் புகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பயிர் சேதங்களுக்கான நிவாரணத் தொகைகளை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கோரினர்.



கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் முக்கியமானது, வனவிலங்குச் சட்டத்தில் திருத்தம் செய்து விவசாய நிலங்களில் புகும் காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொல்ல அனுமதி தர வேண்டும் என்பதாகும். இக்கோரிக்கை விவசாயிகளின் பயிர்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டது.



இந்த ஆண்டு நடைபெற்ற உழவர் தின நிகழ்வு, கடந்த 47 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் ஒரு பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகும். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5 ஆம் தேதி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டு, தங்களது ஒற்றுமையையும், விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...