கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சி.ராமசாமி காலமானார்

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சி.ராமசாமி (77) உடல்நலக்குறைவால் காலமானார். இவர் புகழ்பெற்ற பொருளாதார விஞ்ஞானியாகவும், பல சர்வதேச கட்டுரைகளை வெளியிட்டவராகவும் அறியப்படுகிறார்.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சி.ராமசாமி (77) காலமானார். திண்டுக்கல் மாவட்டம் பழனி, வாகரை கிராமத்தைச் சேர்ந்த இவர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் 8-வது துணைவேந்தராக, 2002 முதல் 2008-ம் ஆண்டு வரை இரண்டு முறை பொறுப்பு வகித்துள்ளார்.

டாக்டர் சி.ராமசாமி ஒரு புகழ்பெற்ற பொருளாதார விஞ்ஞானியாகவும், பல சர்வதேச கட்டுரைகளை வெளியிட்டவராகவும் அறியப்படுகிறார். உலக சுகாதார நிறுவனத்தின் திட்டங்கள் மற்றும் பல உயர்மட்ட குழுக்களின் ஆலோசகராக பணியாற்றியுள்ளார். மேலும், இந்திய பொருளாதார மன்றத்தின் தலைவராகவும் பணிபுரிந்துள்ளார்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதிலும், தொழில்துறைகளுடன் ஆராய்ச்சி புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வதிலும், தனியார் வேளாண் கல்லூரிகளை துவக்குவதிலும், சொந்த வருவாயைப் பயன்படுத்தி பல்கலைக்கழகத்தை நடத்துவதிலும் சிறப்பாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் சி.ராமசாமிக்கு சந்திரா என்ற மனைவியும், பிரியா ஆனந்த், சவிதா லெனின் என்ற இரு மகள்களும் உள்ளனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில், ஜூலை 5 அன்று காலமானார்.

இவரது இறுதிச்சடங்கு கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் ஜூலை 5 அன்று நடைபெற்றது. இவரது மறைவுக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் டாக்டர் கீதாலட்சுமி மற்றும் பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் என பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...