கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2024: முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது

கோயம்புத்தூரில் ஜூலை 19 முதல் 28 வரை நடைபெறவுள்ள புத்தகத் திருவிழா 2024-க்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடிசியா இணைந்து நடத்தும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2024, வருகின்ற ஜூலை 19 முதல் 28ஆம் தேதி வரை கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வின் முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று (ஜூலை 5) கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.



மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், 10 நாட்கள் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் மற்றும் அதற்கான முன்னேற்பாடுகள் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வேதாசுமன் IAS, உதவி ஆட்சியர் (பயிற்சி) அங்கத்குமார் ஜெயின் IAS, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மு.கோகிலா, மாவட்ட நூலக அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா தலைவர் கே.ரமேஷ், கொடிசியா தலைவர் கார்த்திகேயன், புத்தகத் திருவிழா உபத் தலைவர் ராஜேஷ், கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவின் முன்னாள் தலைவர் விஜய் ஆனந்த் உள்ளிட்ட பலரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு நடைபெறவுள்ள நிகழ்வில் அதைவிட அதிக எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...