கோவை: குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை - போலீசார் விசாரணை

கோவை காரமடை அருகே பெள்ளாதி கிராமத்தில், 28 வயது பெண் தனது இரண்டரை வயது மகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Coimbatore: கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பெள்ளாதி கிராமத்தில் குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெள்ளாதி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் (31) மத்தம்பாளையத்தில் சைக்கிள் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலாமணி (28). இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டரை வயது மகள் அஸ்விக்கா உள்ளார்.

ஜூலை 4 அன்று காலையில் சந்தோஷ் தோட்டத்திற்குச் சென்றபோது, கலாமணி தனது மகளுடன் வீட்டிலிருந்து வெளியேறினார். நீண்ட நேரம் திரும்பி வராததால் கவலையடைந்த சந்தோஷ், உறவினர்களுடன் தேடியபின் காரமடை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

மதியம் 2 மணியளவில், வீட்டருகே உள்ள கிணற்றோரத்தில் கலாமணியின் செருப்பு கிடந்தது. சந்தேகமடைந்த உறவினர்கள் கிணற்றில் எட்டிப் பார்த்தபோது, கலாமணி மற்றும் அஸ்விக்கா ஆகியோரின் உடல்கள் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக காரமடை காவல்துறையினருக்கும், மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் இருவரின் உடல்களையும் மீட்டனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கலாமணி தனது மகளை மார்போடு துணியால் இறுக்கமாகக் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.

காரமடை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, குழந்தையுடன் தாய் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...