உடுமலையில் 15 நாட்கள் கண்களை கட்டிகொண்டு யோகாசனம் செய்யும் உலகசாதனை நிறைவு

உடுமலையில் யோக ஆசிரியர் குணசேகரன் 15 நாட்கள் கண்களைக் கட்டிக்கொண்டு 360 மணி நேரம் யோகாசனம் செய்து உலக சாதனை படைத்தார். இச்சாதனை ஹை ரேஞ்ச் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் பதிவு செய்யப்பட்டது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மரகதம் யோகாலயம் நடத்தி வரும் யோக ஆசிரியர் குணசேகரன், 15 நாட்கள் கண்களைக் கட்டிக்கொண்டு யோகாசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை முயற்சி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தொடங்கப்பட்டது.

தனியார் திருமண மண்டபத்தில் தொடர்ந்து 15 நாட்கள், 360 மணி நேரம் நடைபெற்ற இந்த சாதனை முயற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, இச்சாதனை ஹை ரேஞ்ச் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் பதிவு செய்யப்பட்டு, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.



இந்த சாதனை குறித்து பேசிய யோக ஆசிரியர் குணசேகரன், "கண்பார்வை இல்லாதவர்களும் யோகாசனம் செய்து ஆரோக்கியம் பெறலாம் என்பதை வலியுறுத்தும் விதமாக கண்களைக் கட்டிக்கொண்டு யோகாசனங்கள் செய்தேன். ஏற்கனவே ஓடும் காரில் யோகாசனம், 4 மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான யோகாசனம் போன்ற சாதனைகளை செய்துள்ளேன். அதன் அடுத்தகட்டமாக, இந்தியாவிலேயே முதல் முறையாக தொடர்ந்து 15 நாட்கள் யோகாசனம் செய்தேன். இந்த சாதனையை பாரத தேசத்திற்கு சமர்ப்பிக்கிறேன்," என்று கூறினார்.

இந்நிகழ்வில் ஹை ரேஞ்ச் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் இந்திய CEO சுமன் பாலே, லண்டன் CEO கே.ஸ்ரீகாந்த், சினேகம் டிரஸ்ட் சுவாமி சுனில்தாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...