பொள்ளாச்சி வடுகபாளையம் ரயில்வே கேட் மூடல்: 50க்கும் மேற்பட்டோர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு

பொள்ளாச்சி வடுகபாளையம் ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்படுவதை எதிர்த்து, நகர மன்ற உறுப்பினர் உமா மகேஸ்வரி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.


Coimbatore: பொள்ளாச்சி நகர மையப்பகுதியில் அமைந்துள்ள வடுகபாளையத்தில் 123 எண் கொண்ட லெவல் கிராசிங் ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்படுவதை தடுக்க கோரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நகர மன்ற உறுப்பினர் உள்ளிட்ட 50க்கு மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர்.

இந்த ரயில்வே கேட், பொள்ளாச்சி மற்றும் கோவை சாலையை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது. கடந்த மூன்று மாதங்களாக ரயில்வே துறையினர் இந்த கேட்டை நிரந்தரமாக மூட முயற்சி மேற்கொண்டு வந்தனர். ஆனால் அப்போது பொதுமக்கள் தொடர்ந்து ஆட்சியர் மற்றும் ரயில்வே நிர்வாகத்திடம் இப்பகுதியில் உள்ள மக்கள் சிரமத்திற்கு உள்ளாவதாகவும், ரயில்வே கேட் நிரந்தரமாக மூடுவதை கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வந்தனர்.



இந்நிலையில், திடீரென நேற்று இந்த ரயில்வே கிராஸ் நிரந்தரமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்குண்டான பணிகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சார்ந்த நகர மன்ற உறுப்பினர் உமா மகேஸ்வரி தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

செய்தியாளரிடம் பேசிய உமா மகேஸ்வரி, "வடுகபாளையம் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த ரயில்வே கேட் பொள்ளாச்சி மற்றும் கோவை செல்வதற்கு பதினாறு கிராமங்களுக்கு வழித்தடமாக இருக்கிறது. இதனால் அன்றாட பணிக்கும் ரேஷன் கடை, மருத்துவமனை, பள்ளிக்கு செல்வதற்கு 6 கிலோமீட்டர் தூரம் வரை சுற்றி செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. மாற்றுப்பாதை பயன்படுத்த ஏதுவாகவில்லை," என்று கூறினார்.

மேலும் அவர், "சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருக்கிறோம். உடனடியாக தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...