உடுமலை அருகே கால்வாய் கரையில் பல லட்சம் மதிப்புள்ள மரங்கள் வெட்டி கடத்தல்: விவசாயிகள் அதிர்ச்சி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூளவாடி-பென்னபுரம் பகுதியில் திருமூர்த்தி அணை பாசன கால்வாய் கரையில் பல லட்சம் மதிப்புள்ள மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளன.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பூளவாடி-பென்னபுரம் பகுதியில் திருமூர்த்தி அணை பாசனத்திற்காக பயன்படுத்தப்படும் பகிர்மான கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் மூலம் சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

கடந்த சில தினங்களாக இரவு மற்றும் பகல் நேரங்களில் இந்த கால்வாய் கரையோரம் உள்ள பல லட்சம் மதிப்புள்ள மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. நேற்று இரவு நேரத்தில் மரங்கள் வெட்டப்படுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து, விவசாயிகள் சம்பவ இடத்திற்கு சென்றபோது, மரங்களை வெட்டிய நபர்கள் தப்பியோடியதாக கூறப்படுகிறது.



இந்த மரங்களை வெட்ட முறையான அனுமதி வழங்கப்பட்டதா அல்லது இது சட்டவிரோத செயலா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல லட்சம் மதிப்புள்ள மரங்களை வெட்டிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மரங்கள் வெட்டப்பட்டதால் கால்வாய் கரை பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் இது சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...