கோவையில் பழைய மின் இணைப்புகளில் ஆர்சிடி கருவி பொருத்த அறிவுறுத்தல்

கோவையில் மின் விபத்துகளைத் தடுக்க பழைய மின் இணைப்புகளில் ஆர்சிடி கருவி பொருத்த மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் மின் பாதுகாப்பு குறித்த முக்கிய அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன.


Coimbatore: கோவை மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் மா. சுப்ரமணியன் அண்மையில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மின் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருவதாகவும், இது மின்நுகர்வோரின் அறியாமையால் ஏற்படும் விபத்துகளாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது புதிய மின் இணைப்புகள் ஆர்.சி.டி. நவீன உபகரணம் பொருத்தி வழங்கப்படுவதாகவும், இந்த ஆர்.சி.டி. உபகரணம் மின் இணைப்பில் ஏதாவது மின்கசிவு ஏற்பட்டால் உடனடியாக மின் துண்டிப்பை ஏற்படுத்தி நுகர்வோரை மின் விபத்தில் இருந்து பாதுகாக்கும் கருவி என்றும் அவர் விளக்கியுள்ளார்.

ஆர்.சி.டி. கருவி பொருத்தப்படாத பழைய மின் இணைப்புகளில் அதை பொருத்தி மின் நுகர்வோர் தங்களது குடும்பங்களைப் பாதுகாக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும், மரம் மற்றும் மரக்கிளைகளை பொதுமக்கள் வெட்டும்போது அருகில் மின்சார கம்பிகள் அல்லது மின் இணைப்பு ஒயர்கள் செல்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மின்சார கம்பிகள் செல்லும் பட்சத்தில் அருகில் உள்ள மின்சார அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்த பின்னரே அப்பணிகளை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இயற்கை சீற்றம் காரணமாக மரக்கிளைகள் அருகில் செல்லும் மின் கம்பிகள் அறுந்து விழுந்தால் அவற்றை அகற்ற முயற்சி செய்யாமல், அந்தப் பகுதிக்குள்பட்ட உதவி பொறியாளர் அல்லது மின்வாரிய பணியாளர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இறுதியாக, ஐஎஸ்ஐ முத்திரையிடப்பட்ட மின் சாதனங்களை மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் மேற்பார்வை பொறியாளர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...