கோவை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார். விண்ணப்பங்கள் ஜூலை 8 வரை வரவேற்கப்படுகின்றன.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின்கீழ் செயல்படும் மேல்நிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப அரசு அணையிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த பணியிடங்களுக்கான மாத தொகுப்பூதியம் குறித்து ஆட்சியர் கூறுகையில், இடைநிலை ஆசிரியருக்கு ரூ.12,000, முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.18,000 வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும், இப்பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவித்தார்.

இந்த பணியிடங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார். முன்னுரிமை பட்டியலில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தவர்கள், பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் வசிப்பவர்கள், பள்ளி அமைந்துள்ள எல்லைக்குள் வசிப்பவர்கள், பள்ளி அமைவிட ஒன்றிய எல்லைக்குள் வசிப்பவர்கள், மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

விண்ணப்பிக்க விரும்புவோர் எழுத்து மூலமாக தங்களின் விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித் தகுதி சான்றுகளுடன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஜூலை 8-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...