கோவை எம்.ஜி. ரோடு பகுதியில் நாளை மின்தடை: மின்வாரியம் அறிவிப்பு

கோவை எம்.ஜி. ரோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை ஜூலை 8 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல பகுதிகளில் மின்தடை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை எம்.ஜி. ரோடு துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நாளை மின்தடை ஏற்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் விவரம்: கோவை எம்.ஜி. ரோடு துணை மின் நிலையம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை (ஜூலை 8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

1. எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலனி

2. சக்தி நகர்

3. நேதாஜிபுரம்

4. அம்மன் நகர்

5. ஜெ.ஜெ. நகர்

6. கங்கா நகர்

7. பெத்தேல் நகர்

8. வசந்தா நகர்

9. ஒண்டிப்புதூர் (ஒரு பகுதி)

10. ஒண்டிப்புதூர் - திருச்சி ரோடு

11. வி.கே.என். நகர்

12. டெக்ஸ்டூல்

மேற்கூறிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இந்த மின்தடை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. மின்சார பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகம் மீண்டும் வழக்கம் போல் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...