கோவை உக்கடம் பெரியகுளம் ஸ்மார்ட் சிட்டி பகுதியில் குப்பைகள் அகற்றும் பணி தீவிரம்

கோவை உக்கடம் பெரியகுளம் ஸ்மார்ட் சிட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அதிகரித்தது. இரவு மழையால் குப்பைகள் சேர்ந்தன. காலையில் ஸ்மார்ட் சிட்டி பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.


Coimbatore: கோவை உக்கடம் பெரியகுளம் ஸ்மார்ட் சிட்டி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிக அளவில் பொதுமக்கள் குவிந்தனர். வார இறுதி நாள் என்பதால் பொழுதுபோக்கிற்காக மக்கள் அதிகமாக வந்திருந்தனர்.

நேற்று இரவு மிதமான மழை பெய்ததால், பொதுமக்கள் உண்ட உணவுப் பொருட்களின் கழிவுகளை ஆங்காங்கே போட்டுவிட்டு சென்றுவிட்டனர். இதனால் ஸ்மார்ட் சிட்டி பகுதி முழுவதும் குப்பைகள் சிதறிக் கிடந்தன.

இந்நிலையில், இன்று காலை ஸ்மார்ட் சிட்டி பணியாளர்கள் களத்தில் இறங்கினர்.



கிளம்பர் தனியாங்கி எனப்படும் கழிவுகளை அள்ளும் வாகனத்தைப் பயன்படுத்தி குப்பைகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் ஸ்மார்ட் சிட்டி பகுதி மீண்டும் சுத்தமாக மாறி வருகிறது.

பொதுமக்கள் குப்பைகளை முறையாக அகற்ற வேண்டும் என்றும், சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டும் என்றும் ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...