கோவையில் கள் விற்பனைக்கு அனுமதி கோரி விவசாயிகள் கள் அருந்தி ஆர்ப்பாட்டம்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கள் விற்பனைக்கு அனுமதி கோரி விவசாயிகள் கள் அருந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசியலமைப்புச் சட்டம் கள்ளுக்கு அனுமதி அளித்திருப்பதாக கூறி, தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.


Coimbatore: கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கள் விற்பனைக்கு அனுமதி கோரி விவசாயிகள் கள் அருந்தி ஆர்ப்பாட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.

பனைமரம் மற்றும் தென்னை மரத்திலிருந்து கள் இறக்கி கேரள மாநிலத்திற்கு விற்பனை செய்ய அனுமதி வழங்கக்கோரி விவசாயிகள் வந்திருந்தனர். கள் நிரப்பப்பட்ட பாட்டில்களை கையில் ஏந்தி வந்த விவசாயிகள், கள் அருந்தியும் சாலையில் ஊற்றியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக்கிற்கு எதிராகவும் கள் விற்பனையை நடைமுறைப்படுத்தக் கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.



நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத் தலைவர் பாபு கூறுகையில், "2009 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் கள் விற்பனைக்கு அனுமதி கேட்டு போராடி வருகிறோம். 2011 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கலைஞர், சிவசுப்பிரமணியம் கமிஷன் அமைத்தார். ஆனால் அந்த அறிக்கை இன்று வரை வெளிவரவில்லை. கடந்த ஒரு வாரமாக பொள்ளாச்சி பகுதியில் காவல்துறையினர் விவசாயிகளை மிரட்டி வருகின்றனர். தோட்டத்திற்குச் சென்று விவசாயம் செய்யவும் அனுமதிப்பதில்லை," என்றார்.



மேலும் அவர், "இந்திய அரசியலமைப்புச் சட்டம், கள் உணவின் ஒரு பகுதி எனவே அதற்கு அனுமதி அளிக்கலாம் என்று கூறுகிறது. டாஸ்மாக்கில் உடல் நலத்திற்கு கேடான மது விற்கப்படும் நிலையில் உணவின் ஒரு பகுதியான கள்ளிற்கு தடை விதித்திருப்பது எங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது. குறைந்தபட்சம் கேரள மாநிலத்திற்கு கள் ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்க வேண்டும். தமிழகத்தில் தொடர்ந்து கள் விற்பனையில் ஈடுபடுவோம். தடுத்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம்," என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...