கோவை மாநகராட்சி விரிவாக்கம்: வைரலான வரைபடம் குறித்து ஆணையாளர் விளக்கம்

கோவை மாநகராட்சி விரிவாக்கம் குறித்து சமூக ஊடகங்களில் பரவிய வரைபடம் உண்மையல்ல என்று ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் விளக்கமளித்துள்ளார். விரிவாக்கம் குறித்த வரைவு அறிக்கை இன்னும் தயாரிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.


Coimbatore: கோவை மாநகராட்சியின் எல்லைகளை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு கோவை மாவட்ட நிர்வாகத்திடம் கருத்துரு கோரியுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. இதையடுத்து, கோவை மாநகராட்சியுடன் இணையவுள்ள கிராமங்கள் என்ற தலைப்பில் ஒரு வரைபடம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

இந்த வரைபடத்தில் வெள்ளமடை, அக்ராஹாரசாமக்குளம், கீரணத்தம், நீலாம்பூர், இருகூர், மலுமிச்சம்பட்டி, தீத்திபாளையம், வேடப்பட்டி, பண்ணிமடை உள்ளிட்ட 20 கிராமங்கள் அடங்கியிருந்தன. இது உண்மை என்றே பலரும் நம்பினர்.



இந்நிலையில், இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது: "சமூக வலைத்தளங்களில் பரவிய அந்த வரைபடம் கோவை மாநகராட்சி தரப்பில் உருவாக்கப்பட்டது அல்ல. கோவை மாநகராட்சியை விரிவாக்கம் செய்ய திட்டமுள்ளது. ஆனால் அதற்குள் எந்தெந்த பகுதிகளை சேர்க்கலாம் என இன்னும் நாங்கள் இறுதி செய்யவில்லை. இதுபற்றிய வரைவு அறிக்கை இன்னும் தயாரிக்கப்படவில்லை."

கோவை மாநகருக்கு அருகே உள்ள சில பஞ்சாயத்துகளை மாநகருடன் இணைக்க மாநகராட்சி ஆலோசித்து வருவதாகவும், இந்த பணிகள் முடிந்த பின்னர், அதற்கு அடுத்து வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...