கோவை கல்லாறு அருகே கார் மீது பைக் மோதி விபத்து: இரண்டு இளைஞர்கள் பரிதாப பலி

கோவை கல்லாறு அருகே நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் மனைவி பயணித்த அரசு கார் மீது KTM பைக் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். விபத்தில் பைக் தீப்பிடித்து எரிந்தது.


கோவை: கோவை கல்லாறு அருகே கார் மீது பைக் மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல் அவர்களின் மனைவி ஜூலை 8 ஆம் தேதி அரசு காரில் கோவைக்கு மேட்டுப்பாளையம் வழியாகச் சென்றார். முதல்நிலை காவலர் தமிழ் என்பவர் அந்த காரை ஓட்டிச் சென்றார்.

கார் கல்லாறு அருகே வந்து கொண்டிருந்தபோது, ஊட்டி காந்தல் பகுதியைச் சேர்ந்த காட்டேஜ் ஊழியர் அல்தாஃப் (21) மற்றும் கல்லூரி மாணவர் ஜூனைத் (19) ஆகிய இருவரும் KTM மோட்டார் பைக்கில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு நோக்கிச் சென்றனர்.

எதிர்பாராத விதமாக, அல்தாஃப் அதிவேகமாக ஓட்டிச் சென்ற KTM மோட்டார் பைக் போலீஸ் அதிகாரியின் மனைவி பயணித்த காரின் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் மோட்டார் பைக்கில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.



இந்த விபத்தில் மோட்டார் பைக்கில் தீப்பற்றி மளமளவெனப் பற்றி எரியத் துவங்கியது. உஷாரான அப்பகுதி மக்கள் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் இருவரும் கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அல்தாஃப் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த ஜூனைத் தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில் அவரும் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...