ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் அதிநவீன விரிவுரை பிடிப்பு தளம் திறப்பு

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் அதிநவீன விரிவுரை பிடிப்பு தளம் திறக்கப்பட்டது. மாதம்பட்டி ரங்கராஜ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இத்தளம் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை, துடியலூர் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் அதிநவீன விரிவுரை பிடிப்பு தளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த தொடக்க விழாவில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமிநாராயணசுவாமி கல்வெட்டை திறந்து வைத்தார்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக, இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்களான தொழில் முனைவர், நடிகர், சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ், டென்சிங் ஹிலாரி எவரெஸ்ட் மராத்தானை வென்ற நௌஷீன் பானு சந்த், மற்றும் லவ்லி டிரெயில்ஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டி.எம். இஷாக் முகமது அப்பாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மாதம்பட்டி ரங்கராஜ் அதிநவீன விரிவுரைப் பிடிப்பு தளத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



தொடர்ந்து, எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமிநாராயணசுவாமி தளத்தின் செயல்பாடுகளைத் தொடங்கி வைத்து நேரலையில் தலைமையுரையாற்றினார். பின்னர், கல்லூரி மாணவர்களின் கேள்விகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் பதிலளித்தார்.



இந்த அதிநவீன விரிவுரைப் பிடிப்பு தளத்தின் (லெக்சர் கேப்சரிங் ஸ்டுடியோ) முதன்மை நோக்கம் கல்வித் திறன்களை மேம்படுத்துவதும், கல்வி நிறுவனத்தை மேம்படுத்துவதுமாகும். இது ஆசிரியர்களால் வழங்கப்படும் ஆன்லைன் மற்றும் அவுட்ரீச் நிகழ்ச்சிகளின் பதிவுகளை எளிதாக்குவதோடு, கலப்பு முறையில் பாடங்களை வழங்குவதற்கும், கல்லூரிக்கு வருகை தரும் விருந்தினர்கள் மூலம் விளம்பரப் பேச்சுக்களுக்கும் ஆதாரமாக இருக்கும்.

இந்த வசதி முதன்மையாக மாணவர்கள், ஆசிரியர்கள், வெவ்வேறு தொழில் துறை நிபுணர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு ஆன்லைனில் படிப்புகளை வழங்குவதற்காக தற்கால தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆசிரியர்களின் விரிவுரைகளைப் பதிவுசெய்து அவர்களின் கற்பித்தல் கற்றல் செயல்முறையை பின்னூட்டத்துடன் மேம்படுத்துவதன் மூலம் அவர்களின் திறனை வளர்ப்பதற்கும் தரத்தை உயர்த்துவதற்கும் உதவும்.

இந்த வசதி ஸ்ரீ ராமகிருஷ்ணா அறக்கட்டளையின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களின் ஆசிரியர்களுக்கும் பயனளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. விழாவில் டாக்டர் என்.ஆர். அலமேலு, இயக்குநர் (கல்வித்துறை), முனைவர் பி.கருப்புசாமி, முதல்வர் (பொறுப்பு) மற்றும் அனைத்துத் துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...