கலைஞர் எழுதிய புத்தக விநியோக வழக்கு: கோவை நீதிமன்றத்தில் திமுக மாவட்ட செயலாளர் நா. கார்த்திக் ஆஜர்

கோவையில் கலைஞரின் "ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்" புத்தக விநியோக வழக்கில், திமுக மாவட்ட செயலாளர் நா. கார்த்திக் நீதிமன்றத்தில் ஆஜரானார். பல திமுக நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உடன் இருந்தனர்.


கோவை: கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் "முத்தமிழறிஞர், செம்மொழிக்காவலர் தலைவர் கலைஞர் அவர்கள் எழுதிய "ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்" எனும் புத்தகத்தைப் பொதுமக்களுக்கு விநியோகம் செய்த வழக்கு தொடர்பாக, இன்று (ஜூலை 9) காலை, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ), கோவை ஜே.எம்.1 நீதிமன்றத்திற்கு வந்து ஆஜரானார்.

நா. கார்த்திக்குடன், பாப்பநாயக்கன்புதூர் பகுதி செயலாளர் பரணி கே.பாக்கியராஜ், திமுக பொதுக்குழு உறுப்பினர் இரா. மணிகண்டன் ஆகியோரும் நீதிமன்றத்திற்கு வருகை தந்தனர். மேலும், பல முக்கிய திமுக நிர்வாகிகளும், வழக்கறிஞர்களும் இந்த வழக்கு விசாரணையின் போது உடனிருந்தனர்.

வழக்கறிஞர்களான அகஸ்டஸ், ப.கிருஷ்ணமூர்த்தி, மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அன்புச் செழியன், மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் மருது பாண்டியன், சரவணன், என்.ஆர்.விக்ரம், முத்து விஜயன், கண்ணன், சலாவுதீன், சி.என். சந்திரன், குமணன், மணிவேல், ராஜமாணிக்கம், சந்திரமோகன், வெங்கடாசலம், முருகானந்தம், வினோத், பிரபாகரன், ஸ்டீபன், சின்னத்துரை, மாதவன், எலிசபெத் ராணி, கலைவாணி, மோகன்குமார் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

கட்சியின் பிற முக்கிய நிர்வாகிகளான நெசவாளர் அணி அமைப்பாளர் வி.மணி, வட்டக்கழக செயலாளர் டவுன் பா.ஆனந்தன், பழையூர் சோமு, ஆனந்தன், ராஜா உள்ளிட்ட பலரும் நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்தனர். இந்த வழக்கு விசாரணை தொடர்பாக திமுகவினர் அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...