கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு மண்டலத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன் வடக்கு மண்டலத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். பள்ளிகள், சுகாதார நிலையங்கள், நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை பார்வையிட்டார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள் இன்று (09.07.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண் -15 சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள சுமார் 200 இலட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி புனரமைப்பு,



தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மையம் ஆகியவற்றை ஆணையாளர் பார்வையிட்டார்.



அப்பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியிலும் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.



வார்டு எண்.2க்குட்பட்ட துடியலூர் சேரன் காலனி பகுதியில் 15-வது மத்தியகுழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற துணை சுகாதார நிலையத்தையும்,



வார்டு எண் 12 சின்னவேடம்பட்டி குளக்கரை பகுதியில் அம்ரூத்-20 திட்டத்தின் கீழ் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் நடைபாதை மற்றும் மிதிவண்டி பாதை அமைக்கும் பணிகளையும் ஆணையாளர் ஆய்வு செய்தார்.



வார்டு எண் 12க்குட்பட்ட உடையாம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.99.50 இலட்சம் மதிப்பீட்டில் 8 புதிய வகுப்பறைகள் கட்டும் பணிகளையும்,



வார்டு எண் - 19க்குட்பட்ட மணியகாரன்பாளையம் பகுதியில் தேசிய நகர்புற சுகாதாரப் பணிகள் திட்டத்தின் கீழ் ரூ.1.57 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தையும் ஆணையாளர் ஆய்வு செய்தார்.



வார்டு எண் -28க்குட்பட்ட ஆவாரம்பாளையம் பகுதியில் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.22.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நியாய விலை கடை,





வார்டு எண்-27 ஆவாரம்பாளையம் சாலை பெருமாள் கோவில் வீதி பகுதியில் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.2200 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய விலை கடை மற்றும் அங்கன்வாடி மையம் ஆகியவற்றையும் ஆணையாளர் ஆய்வு செய்தார்.



வார்டு எண்-26 முல்லை நகர் பகுதியில் தேசிய நகர்புற வாழ்வாதார பணிகள் திட்டத்தின் கீழ் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆதரவற்றோர்களுக்கான இரவு தங்கும் விடுதியையும் ஆணையாளர் ஆய்வு செய்து, பணிகளை விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், உதவி ஆணையர் ஸ்ரீதேவி, மாமன்ற உறுப்பினர்கள் சாந்தாமணி, புஷ்பமணி, அம்பிகா, ராமமூர்த்தி, கண்ணகி ஜோதிபாசு, தனபால், சித்ரா வெள்ளியங்கிரி, உதவி செயற்பொறியாளர் எழில், மண்டல சுகாதார அலுவலர் இராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...