மடத்துக்குளத்தில் காலமான சிறப்பு உதவி ஆய்வாளருக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வம் (54) காலமானார். அவரது உடலுக்கு 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள், பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வம் (54) உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த செல்வம், நேற்று முன்தினம் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். அவரது உடல் நேற்று இரவு சொந்த ஊரான மடத்துக்குளத்திற்கு கொண்டு வரப்பட்டது.



அரசு உத்தரவின் பேரில், செல்வத்தின் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் டிஎஸ்பி சுகுமாரன், இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், நிர்மலா தேவி ஆகியோர் பங்கேற்று மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். மேலும், காவல்துறையினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...