கோவையில் கார் திருட்டு மற்றும் மோசடி: நூதன முறையில் செயல்பட்ட கொள்ளைக் கும்பல் கைது

கோவையில் கார்களை திருடி, கண்டுபிடித்து தருவதாக கூறி மிரட்டி பணம் பறித்து வந்த நூதன கொள்ளை கும்பல் கைது செய்யப்பட்டது. கேரளா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கும்பல்கள் இணைந்து செயல்பட்டுள்ளன.


Coimbatore: கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் கேரளாவைச் சேர்ந்த கார்களை வாடகைக்கு எடுத்து கோவை மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அடமானம் வைத்து ஏமாற்றியது தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கடந்த ஜூன் 22, 2024 அன்று, கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த K.H நவாஸ் என்பவர் கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.







மார்ச் 20, 2024 அன்று தனக்குச் சொந்தமான மூன்று கார்கள் - KQ 45 X 5136 (சிவப்பு மாருதி பீரிசா), KL 17R 7912 (வெள்ளை மாருதி பலினோ), மற்றும் KL 47 K 7006 (சிவப்பு மகேந்திரா தார்) - கோவையில் திருடப்பட்டதாக தெரிவித்தார்.

போலீஸ் விசாரணையில், கேரளா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு கும்பல்கள் இணைந்து திட்டமிட்டு இந்த குற்றச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. ஜூன் 28, 2024 அன்று கரும்புகடையைச் சேர்ந்த முகமது யாசீர், அசாருதீன், முகமது யூசுப், ஜான்சுந்தர் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அப்பாஸ் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

கொள்ளைக் கும்பலின் செயல்முறை பின்வருமாறு:

1. கேரளாவில் உள்ள கும்பல் சொகுசு கார்களை உரிமையாளர்களிடமிருந்து வாடகைக்கு எடுத்துக்கொள்ளும்.

2. கார்களை கோவைக்கு கொண்டு வந்து, கரும்புகடையில் உள்ள ரியாசுதீன் மற்றும் தௌபீக் என்பவர்களிடம் அடமானம் வைத்து பணம் பெறுவர்.

3. கார்களின் GPS கருவிகளை அகற்றி, நம்பர் பிளேட்டுகளை மாற்றி, புதிய GPS பொருத்தி, ஜான்சுந்தரின் பணிமனையில் வண்ணம் மாற்றி விற்பனை செய்வர்.

4. TB Track என்ற செல்போன் செயலி மூலம் கார்களின் நடமாட்டத்தை கண்காணிப்பர்.

5. உண்மையான உரிமையாளர்களை அழைத்து, காரின் இருப்பிடம் தெரிந்ததாகக் கூறி மிரட்டி பணம் பெறுவர்.

ஜூலை 1, 2024 அன்று அப்பாஸும், ஜூலை 7, 2024 அன்று ரியாசுதீன் (ரியாஸ்) மற்றும் முகமது வஹாப் (தௌபீக்) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மூன்று திருடப்பட்ட கார்களும் மீட்கப்பட்டுள்ளன. கேரளாவைச் சேர்ந்த மற்ற கொள்ளையர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...