தேசிய பழு தூக்கும் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்கள் வென்ற கோவை டாஸ்மாக் ஊழியர்

கோவையைச் சேர்ந்த டாஸ்மாக் ஊழியர் ஈஸ்வரன், ராஜஸ்தானில் நடைபெற்ற தேசிய அளவிலான பழு தூக்கும் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களையும் ஸ்ட்ராங் மேன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்டம் ஈச்சனாரி பகுதியில் வசிக்கும் ஈஸ்வரன் என்பவர் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர், பழு தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று வரும் இவர், சமீபத்தில் ராஜஸ்தானில் நடைபெற்ற தேசிய அளவிலான பழு தூக்கும் போட்டியில் தமிழ்நாடு அணி சார்பாக பங்கேற்றார்.

இப்போட்டியில் தான் பங்கேற்ற மூன்று பிரிவுகளிலும் முதலிடம் பிடித்து மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார் ஈஸ்வரன். மாஸ்டர் பிரிவில் நடந்த பழு தூக்கும் போட்டியில் 455 கிலோ எடையை தூக்கியுள்ளார். பெஞ்ச் பிரஸ் பிரிவில் 105 கிலோ எடையையும், டெட் லிஃப்ட் பிரிவில் 200 கிலோ எடையையும் தூக்கியுள்ளார்.



மூன்று பிரிவுகளிலும் அதிக எடையை தூக்கியதால், ஸ்ட்ராங் மேன் என்ற பட்டத்தையும் வென்றுள்ளார் ஈஸ்வரன். தற்போது நண்பர்களின் உதவியுடன் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ளும் இவர், அரசாங்கமும் தன்னார்வலர்களும் உதவி புரிந்தால் தான் மேலும் உயர முடியும் என்று கூறினார்.

பல்வேறு பணிகள் மற்றும் குடும்ப சூழல் மத்தியிலும் தேசிய அளவில் சாதனை புரிந்த ஈஸ்வரன், தற்போது சர்வதேச அளவிலான போட்டிக்கு தன்னை தயார்படுத்தி வருகிறார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...