கோவை வேளாண் பல்கலையில் வருடாந்திர காரிஃப் எண்ணெய் வித்துக்குழு கூட்டம்

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வருடாந்திர காரிஃப் எண்ணெய் வித்துக்குழு கூட்டம் நடைபெற்றது. எண்ணெய் வித்து பயிர்களின் முக்கியத்துவம், ஆராய்ச்சி முடிவுகள், புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.


Coimbatore: கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகத்தில் வருடாந்திர காரிஃப் எண்ணெய்வித்துக்குழு கூட்டத்தின் துவக்க விழா இன்று (09.07.2024) நடைபெற்றது. தாவர இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மையம் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள இந்திய எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தன.

முனைவர் எம். இரவீந்திரன், ஆராய்ச்சி இயக்குநர், வரவேற்புரை ஆற்றி விழாவினை தொடக்கி வைத்தார். உலகளவில் மற்றும் இந்திய அளவில், எண்ணெய் பயிர்களின் மகசூல் மற்றும் உற்பத்திதிறன் குறித்து அவர் உரையாற்றினார்.



Dr. சஞ்சீவ் குப்தா, ADG(O&P), எண்ணெய் வித்து பயிர்களான எள், சூரியகாந்தி, ஆமணக்கு மற்றும் நைஜர் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை சுருக்கமாக விளக்கினார். பண்பு சார்ந்த மரபணு வகைகளை பல்வேறு சூழலில் மதிப்பீடு செய்து தேர்வு செய்தல் மிகவும் இன்றியமையாதது எனவும் அவர் வலியுறுத்தினார்.

முனைவர் R.K. மதூர், இயக்குநர் ICAR, IIOR ஹைதராபாத், ஆமணக்கு மற்றும் சூரியகாந்தியில் கடந்த ஆண்டில் நடைபெற்ற ஆராய்ச்சி முடிவுகளை எடுத்துரைத்தார். அதைத் தொடர்ந்து முனைவர் ஆனந்த் விஸ்வகர்மா, எள் மற்றும் நைஜர் எண்ணெய் வித்துகளின் கடந்த ஆண்டு ஆராய்ச்சி முடிவுகளை விளக்கினார்.



முனைவர் T.R. சர்மா (DDG CCS), ICAR, புது டெல்லி, எண்ணெய் வித்து பயிர்களின் திட்ட ஒருங்கிணைப்பாளர்களின் சாதனைகளை பாராட்டினார். நோய்கள் மற்றும் பூச்சிகள் தாக்குதலை தாங்கி வளரக்கூடிய இரகங்களை உருவாக்க மரபணு மூலக்கூறு காரணிகளை பயன்படுத்த அவர் வலியுறுத்தினார்.

துணைவேந்தர் முனைவர் வி. கீதாலட்சுமி, எண்ணெய் வித்து பயிர்களின் முக்கியத்துவம், இரகங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து பேசினார். மாறிவரும் காலநிலைக்கேற்ற வகையில் அதிக விளைச்சல் தரும் குறுகிய கால மண்டலத்திற்கு ஏற்ற இயந்திர அறுவடை செய்யும் இரகங்களை உருவாக்குதல் மூலம் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தித்திறனை உயர்த்த இயலும் என்று அவர் கூறினார்.

நிகழ்ச்சியின் போது எள் பயிர் சாகுபடி, எண்ணெய் வித்து தொழில்நுட்பங்கள் மற்றும் எள், சூரியகாந்தி, ஆமணக்கு மற்றும் நைஜர் பற்றிய வருடாந்திர அறிக்கை உள்ளிட்ட புதிய வெளியீடுகள் அதிகாரிகளால் வெளியிடப்பட்டது.

இக்குழு கூட்டத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து ஆமணக்கு, சூரியகாந்தி, எள் மற்றும் நைஜர் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள 150க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...