கள்ளச்சாராய ஒழிப்பு: கோவையில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் கள்ளச்சாராய ஒழிப்பு மற்றும் கள்ளுக்கடைகள் திறப்பு கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Coimbatore: கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் சார்பில் கள்ளச்சாராய மரணங்களைத் தடுக்க திமுக அரசு முன் வர வேண்டும் எனவும், கள்ளுக்கடைகளைத் திறக்க வேண்டும் எனவும் கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (ஜூலை 9) நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் மாநில பொதுச் செயலாளர் கே.சி. ராஜா தலைமையிலும், கோவை மண்டல தலைவர் சுதர்சன் முன்னிலையிலும் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வியாபாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.



ஆர்ப்பாட்டக்காரர்கள், கள்ளச்சாராயத்தால் தமிழ்நாட்டில் பல உயிர்கள் பறிபோய்விட்டதாகவும், கள்ளச்சாராயம் குடிப்பதை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கி வருவதாகவும் குற்றம்சாட்டினர். மேலும், மது பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு அமைத்து அவர்களைத் திருத்த வேண்டும் எனவும், மதுவுக்கு அடிமையாக இருப்பவர்களைப் பாடம் எடுத்து முழுமையாக சரி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் கள்ளச்சாராய விற்பனையை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்ற வலியுறுத்தலுடன் நடைபெற்றது. அதே நேரத்தில், கள்ளுக்கடைகளை மீண்டும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...