பொள்ளாச்சி எம்.பி. கே.ஈஸ்வரசாமி மக்களுக்கு நன்றி தெரிவிப்பு

பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, வால்பாறை சட்டமன்றத் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.


கோவை: பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி இன்று (10.07.2024) கோவை தெற்கு மாவட்டம், வால்பாறை சட்டமன்ற தொகுதியின் பல்வேறு பகுதிகளில் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.



ஆனைமலை கிழக்கு ஒன்றியம், கோட்டூர் பேரூராட்சிக்கு உட்பட்ட உழவர் சந்தை, காவல் நிலையம், பேரூராட்சி அலுவலகம், குமரன் கட்டிடம், பொங்காலியூர், ஆழியார் PAP, மற்றும் அறிவு திருக்கோவில் ஆகிய பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களை சந்தித்து நன்றியை தெரிவித்தார்.



தேர்தலில் தனக்கு ஆதரவு அளித்த மக்களின் நம்பிக்கைக்கு உகந்தவாறு செயல்படுவதாகவும், தொகுதி மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவதாகவும் கே.ஈஸ்வரசாமி உறுதியளித்தார். மேலும், தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...