கோவை ஆம்னி பேருந்து நிலையம் மேம்பாட்டுப் பணிகள் ஆகஸ்டில் நிறைவடையும்

கோவை காந்திபுரத்தில் உள்ள ஆம்னி பேருந்து நிலையம் ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படுகிறது. பணிகள் ஆகஸ்ட் மாதத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கோவை: கோவை மாநகரில் உள்ள முக்கிய பேருந்து நிலையங்களில் ஒன்றான காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையத்தின் மேம்பாட்டுப் பணிகள் ஆகஸ்ட் மாதத்தில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில், வார்டு 48ல் ஜி.பி. சிக்னல் அருகே மேம்பாலப் பகுதியில் சுமார் 1.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த பேருந்து நிலையம், தனியார் பேருந்துகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. அதிகரித்து வரும் தனியார் பேருந்துகளின் எண்ணிக்கை, பயணிகள் எண்ணிக்கை மற்றும் அவசிய உட்கட்டமைப்பு வசதிகளின் தேவையை கருத்தில் கொண்டு, இந்த பேருந்து நிலையத்தை ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் தரமுயர்த்த முடிவு செய்யப்பட்டது.

இந்த மேம்பாட்டுப் பணிகளுக்கான பூமிபூஜை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. அதன் பின்னர், கடந்த சில மாதங்களாக பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த புனரமைப்புப் பணிகளின் ஒரு பகுதியாக, வளாகத்திற்குள் மேற்கூரை, பேருந்துகள் நிறுத்தும் வசதி, கழிவறைகள், கடைகள், மழைநீர் வடிகால், பாலூட்டும் தாய்மார்களுக்கான அறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.

தினமும் சுமார் 1,500 முதல் 1,800 வரையிலான பயணிகள், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பயன்படுத்தும் வகையில் சிறந்த கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக, இந்த கட்டுமானப் பணிகள் 6 மாதங்களில் நிறைவடையும் என கோவை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆரம்பத்தில் செப்டம்பர் மாதம் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைய தகவல்களின்படி இந்த மேம்பாட்டுப் பணிகள் இன்னும் ஒன்றரை மாதத்தில், அதாவது ஆகஸ்ட் மாதத்தில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்ததும், பயணிகளுக்கு மேம்பட்ட வசதிகளுடன் கூடிய ஆம்னி பேருந்து நிலையம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...