கோவை சின்னவேடம்பட்டி ஏரி நீர்வழித்தடங்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர்

கோவை மாநகராட்சி ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன் சின்னவேடம்பட்டி ஏரியின் நீர்வழித்தடங்களை ஆய்வு செய்தார். 200 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த ஏரி, சுமார் 25 கி.மீ சுற்றளவில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துகிறது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன் IAS, இன்று (10.07.2023) சின்னவேடம்பட்டி ஏரிக்கு வரும் நீர்வழித்தடங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோவை மாநகராட்சியின் வடக்கு மண்டலத்தில் அமைந்துள்ள சின்னவேடம்பட்டி ஏரி சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீரே இந்த ஏரியின் முக்கிய நீர் ஆதாரமாகும். கணுவாய் பகுதியில் தொடங்கி, துடியலூர், விஸ்வநாதபுரம் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள வாய்க்கால்கள் வழியாக மழைநீர் இந்த ஏரியை வந்தடைகிறது.

இந்த ஏரியானது உடையாம்பாளையம், நல்லாம்பாளையம், காளப்பட்டி, விளாங்குறிச்சி, செராயம்பாளையம், மயிலம்பட்டி, ஆண்டக்காபாளையம், வெள்ளானப்பட்டி, அரசூர் மற்றும் சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25 கிலோமீட்டர் சுற்றளவுக்கு நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துகிறது.



மாநகராட்சி ஆணையர் இன்று மேற்கொண்ட ஆய்வின் போது, கணுவாய் அணைக்கட்டு, கணுவாய் தடுப்பணை, நஞ்சுண்டாபுரம், வீரபாண்டி பிரிவு, சின்ன தடாகம், மாங்கரை சின்ன தடாகம் மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டார்.



சின்னவேடம்பட்டி ஏரிக்கான நீர்வரத்து குறித்தும், நீர் வரத்திற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அலுவலர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அம்சராஜ், உதவிப் பொறியாளர் சிவக்குமார், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் எழில், உதவிப் பொறியாளர் ஜெயின்ராஜ், கௌசிகா நீர் கரங்கள் ஒருங்கிணைப்பாளர் சிவராஜா, வனத்துறை வனவர் மதுசூதனன், வனக்காப்பாளர் மணிராஜ் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...