கோவை எவரெஸ்ட் இண்டஸ்ட்ரீஸ் மாநகராட்சிக்கு 75 கழிவறை கோப்பைகள் வழங்கல்

கோவை எவரெஸ்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், தெற்கு மண்டலத்தின் கழிவறைகளுக்காக 75 இந்திய வகை கழிவறை கோப்பைகளை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கியது. இந்த நன்கொடை ரூ.3.75 லட்சம் மதிப்புள்ளது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் எவரெஸ்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் மாநகராட்சிக்கு 75 இந்திய வகை கழிவறை கோப்பைகளை (Indian Class Set) வழங்கியது.

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்களிடம் இந்த கழிவறை கோப்பைகளை எவரெஸ்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் பொது மேலாளர் சுமிதா பத்மநாபன் நாயர் வழங்கினார். இந்த கழிவறை கோப்பைகள் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளின் கழிவறைகளில் பயன்படுத்தப்படும். ஒவ்வொரு கழிவறை கோப்பையின் மதிப்பு ரூ.5,000 ஆகும். மொத்தம் 75 கழிவறை கோப்பைகளின் மொத்த மதிப்பு ரூ.3.75 லட்சம் ஆகும்.

இந்த நிகழ்ச்சியில் எவரெஸ்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தொழிற்சாலை மேலாளர் கிரிதர் ரெட்டி, மேலாளர் நாகராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர். மாநகராட்சி தரப்பில் உதவி ஆணையர் (பொறுப்பு) இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ் ஆகியோரும் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...