கோவையில் அண்ணாமலையின் படத்தை கிழித்தெரிந்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் படத்தை கிழித்தெரிந்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். செல்வப்பெருந்தகை குறித்த அண்ணாமலையின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் படத்தை கிழித்தெரிந்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் செல்வப்பெருந்தகை குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்ற கருத்திலிருந்து தான் பின்வாங்க போவதில்லை என்றும், செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கும் வழக்கம் தனக்கு இல்லை என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவரது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், செல்வப்பெருந்தகை எங்கு வேண்டுமானாலும் வழக்கு தொடரலாம், அவரை நீதிமன்றத்தில் சந்திக்க தான் தயாராக இருப்பதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார்.



இந்த பதிவுக்கு காங்கிரஸ் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் வடக்கு மாவட்ட தலைவர் வி எம் சி மனோகரன் தலைமையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அண்ணாமலையின் புகைப்படத்தை கிழித்து எரித்தனர்.



மேலும், கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் கவுன்சிலர்கள் சங்கர், காயத்ரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...