உடுமலையில் மதுரை வீரன் கோவில் திருவிழா: திருக்கல்யாணத்தில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

உடுமலையில் 57 ஆண்டுகள் பழமையான மதுரை வீரன் கோவில் திருவிழா நடைபெற்றது. திருக்கல்யாணம், அபிஷேகம், முளைப்பாறி எடுத்தல் போன்ற நிகழ்வுகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட நான்காவது வார்டு யு எஸ் எஸ் காலனி பகுதியில் 57 ஆண்டுகள் பழமையான மதுரை வீரன் கோவில் திருவிழா நேற்று (9-7-24) ஆனி மாதம் 25 ம் தேதி துவங்கியது.

இன்று முக்கிய நிகழ்வான ஸ்ரீ மதுரை வீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக மாரியம்மன் கோவில் சுந்தர் அர்ச்சகர் தலைமையில் நடைபெற்றது. இதில் பக்தர்கள் சார்பில் திருமாங்கல்யம், மாலைகள், புத்தாடைகள் உள்ளிட்ட 25 வகையான சீர்வரிசைகள் சுவாமிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டன.



மேலும் பால், பன்னீர், புஷ்பம், மஞ்சள் உள்ளிட்ட 14 வகை அபிஷேகங்கள் மதுரை வீரன் சாமிக்கு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க மதுரை வீரன் சாமிக்கு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடந்து முடிந்த நிலையில் மாலை மாற்றுதல், தேங்காய் உருட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வைபவங்கள் நடைபெற்றன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் மதுரை வீரன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

முன்னதாக இன்று காலையில் முளைப்பாறி எடுக்கும் ஊர்வலத்தில் பெண்கள் பங்கேற்று தன்னாட்சி யப்பன் கோவில் பகுதியில் இருந்து கோவில் வரை வந்தனர்.

இதற்கிடையில் நேற்று முதல் நாளில் திருச்செந்தூர், பவானி, கூடுதுறை, திருமூர்த்தி மலை உள்ளிட்ட பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் சக்தி கும்பம் அழைத்தல் நிகழ்ச்சியும் ஊர்வலமாக சென்று மதுரைவீரன் கோவிலை அடைந்தது. மேற்கண்ட நிகழ்வுகளிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...