திருப்பூர் பின்னலாடை தொழில் நாட்டின் பொருளாதாரத்துக்கு பக்கபலம் - மத்திய செயலர் தாஸ் பெருமிதம்

திருப்பூரில் ஏற்றுமதியாளர்களுடன் நடந்த கூட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் மத்திய செயலர் தாஸ் திருப்பூர் பின்னலாடை தொழிலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.


Coimbatore: திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் மத்திய செயலர் தாஸ், தமிழ்நாடு அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவன தொழில் செயலர் அர்ச்சனா பட்நாயக் உள்ளிட்ட 10 ஐஏஎஸ் அதிகாரிகள், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவன தொழில் செயலர் அர்ச்சனா பட்நாயக், "தமிழகத்தின் முக்கியத் தொழில் நகரமாக திருப்பூர் பின்னலாடைத் தொழில் மூலம் மாநிலத்தின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகிறது. இங்கு பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்துள்ளோம். சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் குறித்து சரி, தவறுகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். இந்த தொழிலின் நீண்டநாள் கோரிக்கைகள் குறித்து மாநில அரசுக்கு கொண்டு செல்லப்படும்" என்று தெரிவித்தார்.



சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் மத்திய செயலர் தாஸ் பேசுகையில், "ஏற்றுமதியில் ஜவுளித்துறை முன்னிலையில் உள்ளது. ஜவுளித்தொழிலில் செயற்கை நூலிழை உலக அளவில் 70 சதவீதம் பயன்பாட்டில் உள்ளது. வெளிநாடுகளில் 3 மாதங்கள் கோடையும், 9 மாதங்கள் குளிரும் இருப்பதால் அங்கு அதிகளவில் செயற்கை நூலிழை எனப்படும் பாலியெஸ்டரின் பயன்பாடு தான் அதிகளவில் உள்ளது. இன்றைக்கு ரூ. 35 ஆயிரம் கோடி ஏற்றுமதி என்பது நல்ல கட்டமைப்பு தான். தொடர்ந்து முன்னோக்கி செல்ல, இந்த கட்டமைப்பு நமக்கு பயன்படும். நாட்டின் வளர்ச்சிக்கு இது உதவும்" என்றார்.

மேலும் அவர், "கிரீன் டெக்னாலஜிக்கான மூலப்பொருட்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நிதி ஆயோக் மூலம் இந்த தொழிலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லப்படும். நாட்டின் பொருளாதாரத்துக்கு திருப்பூர் போன்ற பின்னலாடை நகரங்கள் பக்கபலமாக உள்ளது" என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். பின்னர், தொழில்துறையினருடன் ஆலோசனையில் ஈடுபட்டு, அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...