கோவை செலக்கரிச்சல் அருகே கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா நபர் கைது

கோவை செலக்கரிச்சல் அருகே கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பினாய் பாரிக் என்பவரை சுல்தான்பேட்டை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 12,000 மதிப்புள்ள 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Coimbatore: கோவை சுல்தான்பேட்டை காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக இன்று ஜூலை 10 ஆம் தேதி சுல்தான்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில், சுல்தான்பேட்டை காவல் நிலைய காவல்துறையினர் செலக்கரிச்சல் அருகே சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பினாய் பாரிக் (40) என்பவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பினாய் பாரிக்கிடமிருந்து போலீசார் ரூ. 12,000 மதிப்புள்ள 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...