பெரியநாயக்கன்பாளையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

பெரியநாயக்கன்பாளையம் விவேகானந்தபுரம் சமுதாயக்கூடத்தில் ஜூலை 14 அன்று இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. கண் புரை, குழந்தைகளின் கண் நோய்கள், கண் அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு கண் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.


Coimbatore: கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் வரும் ஜூலை 14ஆம் தேதி நடைபெற உள்ளது. ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயம், ஐ பவுண்டேஷன் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி ஆகியவை இணைந்து இந்த முகாமை ஏற்பாடு செய்துள்ளன.


பெரியநாயக்கன்பாளையம், கஸ்தூரிபாளையம் செல்லும் சாலையில் 5 Corner பகுதியில் உள்ள விவேகானந்தபுரம் சமுதாயக் கூடத்தில் இந்த முகாம் நடைபெறும். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் கண் புரை கண்டறிதல், குழந்தைகளுக்கான கண் நோய்கள், கண் நீர் அழுத்த நோய், தூரப்பார்வை, கிட்டப் பார்வை, வெள்ளெழுத்து போன்ற பல்வேறு கண் நோய்களுக்கு சிறந்த முறையில் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்க உள்ளனர்.


பெரியவர்கள், சிறியவர்கள் என கண் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் இந்த முகாமில் நிவாரணம் பெறலாம். கண்புரை பரிசோதனைக்கு பிறகு அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு சிறந்த முறையில் அறுவை சிகிச்சை செய்து தரப்படும். முகாமில் கலந்து கொள்ள வரும் பொழுது ஆதார் அட்டையின் நகல் எடுத்து வர வேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...