இருகூர் மற்றும் சோமையம்பாளையம் பகுதிகளில் நாளை மின்தடை: மின்வாரியம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் இருகூர் மற்றும் சோமையம்பாளையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 12) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல பகுதிகளில் மின்தடை இருக்கும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் இருகூர் மற்றும் சோமையம்பாளையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (ஜூலை 12) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல பகுதிகளில் மின்தடை இருக்கும் என மின்வாரியம் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இருகூர் துணை மின் நிலையத்தின் கீழ் வரும் பகுதிகளான இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், ராவத்தூர், பள்ளபாளையம் (ஒரு பகுதி), சிந்தாமணிப்புதூர், கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம் (ஒரு பகுதி), வெங்கிட்டாபுரம், தொட்டி பாளையம் (ஒரு பகுதி), கோல்டுவின்ஸ் (ஒரு பகுதி), அத்தப்ப கவுண்டன்புதூர் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது.

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தின் கீழ் வரும் பகுதிகளான யமுனா நகர், காளப்பநாயக்கன்பாளையம், ஜி.சி.டி.நகர், லுானா நகர், கணுவாய், தடாகம் ரோடு, சோமையம்பாளையம், அகர்வால் பள்ளி ரோடு, சேரன் இண்டஸ்ட்ரியல் பகுதி, கே.என்.ஜி. புதுார், வித்யா காலனி, சாஜ் கார்டன், ஆசிரியர் காலனி, வி.எம்.டி.நகர், நமீதா கார்டன், அப்துல்கலாம் காலனி மற்றும் மேகலாமணி ரோடு ஆகிய இடங்களிலும் மின் விநியோகம் இருக்காது.

இந்த மின்தடை அறிவிப்பு குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு தங்களது அன்றாட பணிகளை திட்டமிட்டுக் கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், பராமரிப்பு பணிகள் முன்னதாகவே முடிவடைந்தால், அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே மின்சாரம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...