கோவையில் கைவினைக் கலைஞர்களின் திருவிழா: கிராஃப்ட் பஜார் 2024

கோவையில் ஜூலை 18 முதல் 23 வரை நடைபெறும் கிராஃப்ட் பஜார் 2024 கண்காட்சியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 98 கைவினைக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர். கலை, கைவினை மற்றும் கைத்தறி பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன.


கோவை: தமிழ்நாடு கைவினைக் கலைஞர்கள் கவுன்சில் (Crafts Council of Tamil Nadu - CCTN) சார்பில் கோவையில் கிராஃப்ட் பஜார் 2024 கண்காட்சி நடைபெறுகிறது. இந்திய கைவினைக் கலைஞர்கள் மற்றும் நெசவாளர்களை ஊக்குவிப்பதும், அவர்கள் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்வதும் இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.

இந்த ஆண்டு நடைபெறும் கிராஃப்ட் பஜாரில் அசாம் முதல் தென்னிந்தியா வரையிலான பகுதிகளைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்கின்றனர். மொத்தம் 98 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 42 கடைகள் ஜவுளி பொருட்களுக்காகவும், 13 கடைகள் ஓவியங்களுக்காகவும், 43 கடைகள் கலை மற்றும் கைவினைப் பொருட்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.



கண்காட்சியில் இடம்பெறும் கலைப் பொருட்களில் பிச்வாய், கவாட், மதுபனி, பட், பட்டச்சித்ரா, வார்லி, கோண்ட், மினியேச்சர் ஓவியங்கள், வங்க பட்டச்சித்ரா, குருவாயூர் சுவர் ஓவியங்கள் ஆகியவை அடங்கும்.



கைவினைப் பொருட்களில் பித்தளை, கண்ணாடி மற்றும் மர கலைப்பொருட்கள், மணிகள், லாக் மற்றும் கண்ணாடி வளையல்கள், டோக்ரா, ஜூட்டிகள், நாணல் மற்றும் கழிவு துணி பாய்கள், உலர் மலர்கள், புதுச்சேரி கைவினை காலணிகள், உலோகம், மண்பாண்டம், கல்சட்டி, நீல பாண்டங்கள், தோல் செருப்புகள், மொசைக் கண்ணாடி, தொங்கு கட்டில்கள், மூங்கில் கைவினைப் பொருட்கள், கோலாப்பூரி செருப்புகள், மரச் சிற்பங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.



மேலும், சிப்பி, முத்து மற்றும் கொம்பு பொருட்கள், தோல் பொம்மைகள், புல் கூடைகள், செம்பு மணிகள், குயில்ட் பைகள், கல் பாத்திரங்கள், பிரம்பு மற்றும் மூங்கில் பொருட்கள், சோலாப்பித், பனை கூடைகள், எம்பிராய்டரி பைகள், கைவினை படுக்கைத் துணிகள், போர்வைகள், அசாம் பிரம்பு மற்றும் மூங்கில் பொருட்கள், கிலிம் கூடைகள், பைகள் மற்றும் அலங்கார பொருட்கள், லேஸ்கள் ஆகியவையும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.



ஜவுளிப் பொருட்களில் பாக், டாபு, சங்கானேரி அச்சுப்பதிப்புகள், தோடா, காஷ்மீர், கலம்காரி, சந்தேரி, புல்காரி, ஷிபோரி, நாராயணபேட், வெங்கடகிரி, கோட்பாட், கட்வால், இக்கட், ஒடிசா & வங்க பருத்தி, பட்டோலா, சிக்கன்காரி, டை அண்ட் டை, கட்ச் சால்வைகள், புஜோடி காலா பருத்தி, குரோஷே, போத்கயா டசார், கந்தா வேலைப்பாடு, பிகானேர் கையால் எம்பிராய்டரி, அஜ்ரக், கோடா புடவைகள், மோல்கல்முரு புடவைகள், முபாரக்பூர் நெசவுகள், உர்முல் புடவைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.



கிராஃப்ட் பஜார் 2024 கண்காட்சி ஜூலை 18 முதல் 23 வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. சுகுணா கல்யாண மண்டபம், பீளமேடு, கோவையில் நடைபெறும் இந்த கண்காட்சிக்கு நுழைவு இலவசம். இந்தியாவின் கலை மற்றும் கைவினைப் பொருட்களை நேரடியாகக் கண்டு ரசிக்கவும், வாங்கவும் கோவை மக்கள் அனைவரும் கண்காட்சிக்கு வருமாறு CCTN அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...