கூடலூர் நகராட்சியில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் பூங்கா நீரூற்று: மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் திறப்பு

கோவை கூடலூர் நகராட்சியின் 12வது வார்டில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.41 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பூங்கா விரைவில் திறக்கப்பட உள்ளது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நீரூற்று கவனம் ஈர்க்கிறது.


Coimbatore: கோவை மாவட்டம் கூடலூர் நகராட்சியின் 12வது வார்டில் அமைந்துள்ள லட்சுமி நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூங்கா விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட உள்ளது. கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.41 லட்சம் மதிப்பீட்டில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

பெரியநாயக்கன்பாளையம் அருகே அமைந்துள்ள இந்த பூங்காவில் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளன. குறிப்பாக, பூங்காவின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நீரூற்று தற்போதே பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.



இரவு நேரங்களில் பல்வேறு வண்ணங்களில் ஒளிரும் இந்த நீரூற்று, பூங்காவின் அழகை மேலும் அதிகரித்துள்ளது. பொழுதுபோக்கு மற்றும் ஓய்வு நேரத்தை செலவிட ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பூங்கா, அப்பகுதி மக்களுக்கு பெரும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பூங்காவின் பராமரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அனைத்து பணிகளும் முடிவடைந்ததும், விரைவில் இப்பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...