கோவை மருதமலை கோயில் பாதையில் குட்டிகளுடன் கடந்து செல்லும் யானைக் கூட்டம்: வைரலாகும் வீடியோ

கோவை மருதமலை கோயிலுக்கு செல்லும் மலைப் பாதையில் குட்டிகளுடன் பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சாலையைக் கடந்து சென்றன. இந்த காட்சியை பக்தர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.


கோவை: கோவை மருதமலை கோயிலுக்கு செல்லும் மலைப் பாதையில் குட்டிகளுடன் காட்டு யானைக் கூட்டம் சாலையைக் கடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மருதமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள வடவள்ளி, ஐ.ஓ.பி காலனி, தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் அவ்வப்போது ஊர்களுக்குள் வந்து செல்வது வழக்கமாகிவிட்டது.

கடந்த சில நாட்களாக ஒற்றை யானை மற்றும் இரண்டு காட்டு யானைகள் மருதமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் படிக்கட்டு பாதை மற்றும் மலைச் சாலையில் கடந்து சென்று வந்தன. இந்நிலையில், ஜூலை 11 அதிகாலை பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குட்டிகளுடன் மருதமலை மலைச் சாலையைக் கடந்து சென்றுள்ளன.

இந்தக் காட்சியை கோயிலுக்கு சென்ற பக்தர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால், வனத்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் வலியுறுத்துகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...